Sunday, October 3, 2010

சொல்லாமல் போனவளே…

.
சொல்லாமல்
போனவளே…
சொல்லிவிடு
“உன்னோடு எனக்கு 
ஓரிரண்டாண்டுகள் மட்டுமா
உறவு?

டுத்தெறிந்து விட்டு
சென்றவளே!
எப்படி முடிந்தது உன்னால்? ? ? ?
சொல்லாமற்போக….

கோடை புறப்படும்போது கூட
குளிர் இறங்கி…
கூப்பாடு போட்டுவிட்டுத்தான்..
செல்கின்றது.
ஆதவன்கூட 
மறைகையில் என்றும்
செங்கதிர் பரப்பி
செப்பியே செல்வான்
பூமியைவிட்டு
புறப்படும் நீயோ…
சொல்லாமற்போன சேதி தான் என்ன?

ன்னிடம் தானே 
கொடுத்துவைத்தேன்…
என் கோவக் கதிர் ஆற்றும்
குளத்தங்கரையை
உன்னிடம்தானே கொடுத்துவைத்தேன்…
என் பசியறிந்து பண்டமிடும்
பாத்திரத்தை

ன்னிடம் தானே 
கொடுத்துவைத்தேன்…
ஞான ஒளி கொடுக்கும்
நல்லறிவை
எப்படி நீ செல்வாய்?
என்னிடத்தில் சொல்லாமல்..
இத்தனையும் எடுத்துக்கொண்டு

சொல்லாமல்
போனவளே 
சோல்லிவிடு
“உன்னோடு எனக்கு
ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமா
உறவு?

1 comment:

  1. DEAR NISHA....

    kalathin ohttaththil
    thuraththin neelam
    sattru thuramakalam - athu
    thuramalla uravea
    kalathin kolam........!

    unmayana anpai
    unarntha uravu
    kalaththin vekaththil
    thuraththallappttalum
    eantrum valum -ujirthutipputan
    un mana oraththil.....!

    by :- saran

    ReplyDelete