Sunday, October 3, 2010

தேடுகிறேன்….காணவில்லை!


அழிந்துபோன இரவுக்காகவா
இல்லை
பிறக்கப்போகும் புதுப்பகலுக்காவா
இத்தனை ஆர்ப்பாட்டம்
அந்த சந்தி வானிலே
பூமியும் கூட இருள் போர்வையகற்றி
இருந்து, எழமுயல்கின்றது
இன்னும் நான் தூங்குகின்றேன்
“இந்தா தம்பி டீ”
“எழும்பு பார்ப்பம்”
இன்னும் ஒலிக்கவில்லை 
அம்மாவின் சுப்ரபாதம்
எங்கே…
எங்கே…
தேடுகிறேன் 
காணவில்லை


என்னை புரிந்துகொண்ட
ஒரே ஒரு பெண்ணை…
உனை
தேடுகிறேன் காணவில்லை


அம்மா –பேனை – காவில்லை!
அம்மா – புத்தகம் - காணவில்லை!
அம்மா – பேசை – காணவில்லை!
அம்மா – சேட்டை – காவில்லை!


இத்தனை குரல்களும்
எதிரென ஒலிக்க
இன்று – அம்மா – காணவில்லை!!


வாசல் கடக்கும் அவசரத்தில்
வந்து மறிக்கும் 
ஒரு வார்த்தை


தம்பி ஐ.சி. எடுத்தியா?


இதுவும் இன்று காணவில்லை
இதையும் இன்று தேடுகின்றேன்


உணவின் பசியை மட்டும் அல்ல – என்
உணர்வின் பிணியையும் உணர்ந்தவளே
உந்தன் பாசம் எங்கேயம்மா?


உரிமை கொண்டு தேடுகின்றேன்
ஊரில் எங்கும் காணவில்லை.


உங்கள் உறவுகள் விட்டுப்போன
நினைவுகளைக்கொண்டு
உங்கள் உருவைத்தேடுகின்றேன்
உலகில் எங்கும் காணவில்லை.

No comments:

Post a Comment